Latest News

September 16, 2013

மீண்டும்4000 புலிகள் ஒன்றுசேர திட்டமாம்: ஹத்துருசிங்க அச்சம்!
by admin - 0

மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயர்த்தியும், கெளரவப்படுத்தியும் பேசி வருவதாக யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். 

இதனால் ஆங்காங்கு மறைந்து வாழ்ந்து வரும் கிட்டத்தட்ட 4000 விடுதலைப் புலிகள் மீண்டும் அணி திரளும் வாய்ப்பிருப்பதாக அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். 

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஹத்துருசிங்க மேலும் கூறியுள்ளதாவது,

´கிட்டத்தட்ட 4000 விடுதலைப் புலிகள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இவர்கள் யாரும் அரசு நடத்திய புத்துணர்வு முகாமுக்கு வரவில்லை. இவர்கள் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நடத்தி வரும் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு மீண்டும் அணி திரளும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம்.

இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால் தாக்குதலுக்கும் கூட முயற்சிக்கலாம். எனவே யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மேலும் பல இராணுவ முகாம்களை அமைக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை செயலாளருக்கு நான் கோரிக்கை விடுக்கவுள்ளேன்´ என மஹிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments