Latest News

September 26, 2013

மாகான சபைக்கு காணி அதிகாரம் இல்லை - மகிந்த நீதிமன்றம்
by admin - 0

காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள்
வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த
மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் நீதியரசர்களான எஸ்.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர
ஆகியோரை கொண்டு குழவினரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments