கொழும்பு புளுமெண்டால்
பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரான தெல் ராஜா என்பவர் இனந்தெரியாத நபரினால்
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், மோட்டார் சைக்களில் வந்த
இருவருடன் தனது வீட்டுக்கு எதிரில்
பேசிக்கொண்டிருந்த போது கார் ஒன்றில்
வந்த ஒருவர் துப்பாக்கி பிரயோகம்
செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த தெல்
ராஜா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவர் செலுத்தி சென்ற
கார் வத்தளை பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் காரை அங்கு கைவிட்டு தப்பிச்
சென்று விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments
Post a Comment