நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தன் மனைவி கயல்விழியுடன் வேலூர் சிறைக்கு இன்று வியாழக்கிழமை சென்றுள்ளார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. சீமான், சிறைச்சாலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற வழக்கில் இந்த மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டதுடன் அவர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment