Latest News

September 27, 2013

இரண்டு கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த பெண் கைது!!!
by Unknown - 0

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணம் மோசடி செய்த பெண்ணொருவர் ஹொரணை மினுவங்கொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் இந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண், வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி நாட்டின் பல பகுதிகளில் உள்ள நபர்களிடம் இருந்து இரண்டு கோடி ரூபாவுக்கும் மேல் பெற்று மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவருக்கு எதிராக திருகோணமலை, அம்பாறை, மாத்தளை, பிலியந்தல, கொட்டாவ ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கைதுசெய்யப்பட்ட பெண் ஹொரணை தலகல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments