வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொண்டையன்கேணி முருகன் கோயில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சிசுவின் சடலத்தில் தலையும், மார்புப் பகுதியும் மாத்திரம் உள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு முன்பாக கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை நாய் உட்கொள்வதைக் கண்ட பெண்மணி ஒருவர் அயலவர்களின் உதவியுடன் இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற வாழைச்சேனை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் சடலத்தை பார்வையிட்ட வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எம்.பி.எம்.ஹ{ஸைன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.
இதனைத் தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
No comments
Post a Comment