Latest News

September 29, 2013

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும்பயந்த சூழலில் – நவிப்பிள்ளை செவ்வி
by Unknown - 0

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும்பயந்த சூழலில் வாழ்கின்றனர்– ABCக்கு நவிப்பிள்ளை வழங்கியசெவ்வி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூன் 2009இல் இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்ட பின்னர் அங்கு சென்ற ஐ.நாவின் மூத்த அதிகாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை, என அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்ட அவர் யுத்தத்தால் உறவுகளையும் உடமைகளையும் இழந்த தமிழ் – சிங்கள மக்களை சந்திக்க முடியாது போனதாகவும், தான் பார்க்க விரும்பியவர்களையும், போக விரும்பிய இடங்களுக்கும் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு தமிழ் மக்கள் பாரிய முறைப்பாடுகளை கொண்டிருப்பதாகவும் முக்கியமானதாக இராணுவத்தினரின் பாரிய படைப் பிரசன்னம் அவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசசார்பற்ற நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சில் பதிவுசெய்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இது வெளிப்படையாகவே ஜனாதிபதியின் அதிகாரத்தை கையிலெடுக்கும் செயல் எனவும், ஒரு ஜனநாயகத்துக்கு இது முற்றிலும் மாறானது எனவும் தெரிவித்தார்.
எல்.எல்.ஆர்.சியின்; பரிந்துரைகளை அரசு நடைமுறிப்படுத்த தவறியுள்ளதாகவும், 2014 மார்ச் மாதத்திற்கு இடையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மனித உரிமைக்கவுன்சில் எடுக்க வேண்டும் எனத் வலியுறுத்தியுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் இலங்கையின் வடக்கிற்கு நேரில் சென்று விட்டு அங்குள்ள மக்கள் பயத்தினாலன்றி தமது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளுக்குமாகவே பெரும்பாலும் அரசியல் தஞ்சம் கோருவதாகவும் தெரிவித்துள்ளார், ஆக, உங்கள் இருவரதும் அறிக்கைகளும் முரண்படுகின்றதே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்…
‘நான் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துள்ளேன், அவர்கள் மிகவும் பயந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அண்மையில் தேர்தல் வேட்பாளர் ஒருவர் மிகவும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார், தொடர்ந்து வந்த தேர்தலில் அவர் வெற்றியீட்டியுள்ளார். இவ்வாறாக சமூகத்தில் முக்கியமானவர்களே பிரசனைகளை எதிர்கொள்ளும் போது சாதாரண மக்களைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள் எனக் கூறிய அவர் பொதுமக்கள், ஊடகவியலாளர், செயற்பாட்டாளார், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் இவை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, நிறுத்தப்படவும் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சும் ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளரின் பிரச்சனைகளையும் தனித்தனியே முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமென்றும் வெறுமனே அரசாங்கத்தின் அறிக்களை நடைமுறைப்படுத்தக் கூடாதென்றும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் முன்னய அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் 1000க்கும் மேற்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதற்கு அவர்கள் இனரீதியாக துன்புறுத்தப்படுவதர்கான போதியளவு ஆதாரங்களின்மையே காரணமாக காட்டப்பட்டதெனவும், இதிலிருந்து கடந்த நான்காண்டுகளில் இலங்கையில் நிலமை மேம்பட்டிருக்கின்றது எனக் கருதலாமா அல்லது இலங்கை அரசு தவறான பிரச்சாரங்களை செய்கின்றது என விளங்கிக் கொள்ளலாமா எனக்கேட்டதற்கு,
‘அவுஸ்ரேலிய அரசு, மற்றும் ஐ.நா.வினது உதவிகளைபெற்று கண்ணுக்கு தெரிகின்ற வீதிகளும் கட்டடங்களும் கட்டப்படுவதால் இலங்கை அரசு பெருமைப்படுவது போல், புனர்வாழ்வு அழிக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமாகிவிடாது, மனித உரிமைப்பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்ற போது தான் புனர்வாழ்வு பூரணமடையும்’ என்று தெரிவித்தார்.
அது மட்டும் அல்லாமல் அவுஸ்ரேலிய, அகதிகள் தொடர்பான உடன்படிக்கையின் 1951வது சரத்தின்படி, ஒவ்வொருவரது கோரிக்கைகளையும் தனித்தனிய்யாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமென்றும், அத்தோடு 2011இன் அவுஸ்ரேலியாவின் தடுப்பு முகாம்களுக்கு சென்றிருந்த சமயம் பெருமெண்ணிக்கையான இலங்கையை சேர்ந்த அகதிகள் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் உடனடியாக விடுவுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமர் ரொனி அபொற் கொண்டுள்ள அகதிகள் தொடர்பான கொளகைகளில் தான் ஆழ்ந்த கவனம் எடுத்துள்ளதாகவும், அகதிகள் தொடர்பான உடன்படிக்கையில் அவுஸ்ரேலி யாவும் ஒரு பங்காளன் என்பதால் பெரும்பாலான மக்கள் இக்கொள்கையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
அவுஸ்ரேலிய அரசும் மக்களும் புகலிடக் கோரிக்கையாளர்களையிட்டு அச்சமடைவதை தவிர்த்து அவர்களை நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன் படுத்தமுடியுமெனவும், அவுஸ்ரேலிய அரசு தனது சொந்த மக்களை வெளியாரின் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்வதோடு, அதே நேரம் அவர்கள் எப்போதும் மனித உரிமைகள் தொடர்பில் மிகவும் கரிசனையுடனும் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
« PREV
NEXT »

No comments