Latest News

September 12, 2013

விக்னேஸ்வரன் கொழும்புக்குத் திரும்ப முடியாது – ராவண பலய எச்சரிக்கை!
by Unknown - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளரிடம் சிங்கள அடிப்படைவாத அமைப்பான ராவண பலய கோரிக்கை விடுத்துள்ளது.

ராவண பலயவின் பொதுச்செயலர் வண.இத்தேகண்டே,சத்ததிஸ்ஸ தேரர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது,

எனது தலைமையிலான ராவண பலய அமைப்பினர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து, வடக்கு மாகாணசபைத் தேர்தலை சட்டபீர்வமாக நடத்தும்படி கேட்டுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளது. இதுநாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலானது.

விக்னேஸ்வரனும் அவரது குழுவினரும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம், தனியான நிர்வாகத்தை உருவாக்க முனைகின்றனர். சமஸ்டிக் கட்டமைப்பின் கீழ் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து, காணி, காவல்துறை, கல்வி, நிதி, சுகாதாரம் போன்ற அதிகாரங்களை கோருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்த நேரடியான கடன்களை பெற முனைகின்றனர். இது அரசியலமைப்புக்கு முரணானது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு விட்டு, கொழும்புக்குத் திரும்பி வரமுடியும் என்று விக்னேஸ்வரன் கனவு கூடக் காணக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments