Latest News

September 03, 2013

ஸ்ரீலங்கா இராணுவத்தால் கடத்துபவர்கள்,கைது செய்யப்படும் தமிழர்களுக்கு மாரடைப்பு,விபத்துபோன்றவற்றால் மரணம் அடுத்து பிரிகேடியர் பால்ராஜின் உறவினர் மரணம்
by admin - 1

கொழும்பு மகசின் சிறையில்
இருந்து நேற்று முன்தினம் தொலைபேசியில் சகஜமாகப்
பேசிய தமிழ் அரசியல் கைதி ஒருவர் இறந்துவிட்டதாக நேற்று திங்கட்கிழமை காலை தெரிவிக்கப்பட்ட தகவலால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த தமிழ் அரசியல் கைது சாதாரணமாக இறக்க சந்தர்ப்பம் இல்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என குறித்த கைதியின் மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவரது மரணம் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தள்ளார். முல்லைத்தீவு – கருநாற்றுக்கேணி பகுதியைச் சேர்ந்த 37 வயதான மாகுருவே பிரான்சிஸ் நெல்சன் என்ற கைதியே சிறையில் மரணமடைந்தவராவார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜின் நெருங்கிய
உறவினராவார். இவர் 2007 ஆம்
ஆண்டு சிலாபத்தில் வைத்துக்
கைது செய்யப்பட்டார். 6
வருடங்களுக்கு மேலாக அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து பலியான கைதியின் மனைவி தெரிவிக்கையில், எனது கணவர் ஞாயிறு இரவு என்னுடன்
தொலைபேசியில் பேசினார். தான் நன்றாக
இருப்பதாக கூறி சகஜமாகவே அவர் பேசினார். மறுநாள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக சிறைச்சாலையில் இருந்து அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகத் உள்ளது. எனவே இம்மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தள்ளார். நேற்று தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்ட அவர், இந்த விடயத்தில் நீதி கிடைக்க தனக்கு உதவுமாறும் கோரியுள்ளார். கொழும்பு சென்று கணவரின் உடலைப்
பார்க்கக் கூட வசதியற்றவராக தான்
இருப்பதாகவும் அவர் அழுதுபுலம்பியுள்ளார். இதனையடுத்து சிறைச்சாலக்கு பொறுப்பாகவ அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுடன் மாவைஎம்.பி. தொலைபேசியில்
தொடர்புகொண்டு பேசினார். இந்த மரணம் தொடர்பில் உண்மையைக்
கண்டறிய வேண்டும். உயிரிழந்த கைதியின்
மனைவி கொழும்பு சென்று கணவரைப்
பற்றி அறிந்துகொள்ள உரிய
ஏற்பாடு செய்யவேண்டும் என அமைச்சரிடம்
மாவை எம்.பி. கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து சிறைச்சாலை ஆணையாளருடன் தொடர்புகொண்டு விசாரித்து, உரிய ஒழுங்குகளைச் செய்வதாக மாவை எம்.பியிம்
அமைச்சர் கஜதீர உறுதியளித்தார்.
« PREV
NEXT »

1 comment

Anonymous said...

Its not right to do these things by Sinhalese Please think what your son was treat in your country was not treat by a Tamil mans son , its Partiality , We all live in one nation and why this unequal for same exam paper ..??? your son get 60 marks to enter uni but at same time 75 marks not given entry .?? why this ..?? Your son also eat with mouth and Tamil son also eat with one mouth only , so why you TREAT THEM DIFFERENT ..??