Latest News

September 19, 2013

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் பிரித்தானிய பிரஜை கைது!
by Unknown - 0

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் இன்று காலை 7 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சிகரெட்டுக்களை 40 வயதான பிரித்தானிய பிரகையொருவரே இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார்.

இவரிடமிருந்து டுபாயில் உற்பத்தி செய்யப்படும் சிகரெட் வகையொன்றின் 124 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவற்றின் பெறுமதி 6 இலட்சம் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்படி சிகரெட் தொகை அரச உடமையாக்கப்பட்டதாகவும், இவற்றைக் கொண்டுவந்த பிரித்தானிய பிரஜை கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments