Latest News

September 27, 2013

இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் அமெரிக்கா - கோத்தபாய காட்டம்
by Unknown - 0


இலங்கையின் நலனுக்கு மிகவும் பாதகமான ஓர் அரசியல் நோக்குடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் செயற்படுகின்றது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மூன்று தசாப்த யுத்தம் முடிந்த பின்னர் ஜனநாயகத்தை மீளக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தன்னாலான சகலதையும் செய்துகொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க தூதரகம் அதை கெடுத்துவருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் முடிந்த கையோடு வெளியிடப்பட்ட அமெரிக்காவின் அறிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அளித்துள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.

வட மாகாணத்தில் சிவில் நிர்வாகம் சிறப்புறவும் நல்லிணக்கம் மேலோங்கவும் வன்முறை மற்றும் மிரட்டலற்ற செயல்முறை அவசியமாகின்றது. இதற்கு இந்த தேர்தல்கள் ஒரு தொடக்கப்புள்ளியை வழங்கியுள்ளன.

ஜனநாயகம் தேர்தல்களோடு மட்டும் சம்மந்தப்பட்ட விடயமல்ல இலங்கையிலுள்ள சகல சமூகத்தினரும் சமாதானம் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வதற்கு மேலும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டும் என அமெரிக்கா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

'ஜனநாயகம் என்பது தேர்தல்களோடு மட்டும் சம்மந்தப்பட்ட விடையமல்ல என்று கூற்றைப்போல ஆபத்தமான ஒன்றை தான் இதுவரை கண்டதில்லை என பாதுகாப்பு செயலாளர் கூறினார்'

இலங்கை பல கட்சிகளை கொண்ட நாடு. யுத்தம் உச்ச கட்டத்திலிருந்த போதும் இலங்கை தேர்தல்களை நடத்தியது. அமெரிக்க தூதரகத்தால் ஆதரிக்கப்படும் சிலர் எந்த மட்ட தேர்தல்களிலும் வெற்றிபெற முடியாதிருப்பதால் இந்த அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது நியாயமானது அல்ல என பாதுகாப்பு செயலாளர் கூறினார்.   
« PREV
NEXT »

No comments