Latest News

September 04, 2013

லண்டன் மாநாட்டில் பங்கேற்ற விரிவுரையாளர்களுக்கு தொந்தரவு.
by admin - 0

 வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற மாநாட்டில் பங்கேற்ற பல்கலைக்கழக
விரிவுரையாளர்கள் தொடர்ந்தும் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதா குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விரிவுரையாளர்கள் விடுதலைப்
புலிகளுக்கு ஆதரவான மாநாடு ஒன்றிலேயே பங்கேற்றதாக இராணுவம் தெரிவித்தமையை அடுத்தே இந்த தொந்தரவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டிலேயே இந்த விரிவுரையாளர்கள் பங்கேற்றதாக
கூட்டுப்படை தலைமையதிகாரி ஜகத்
ஜெயசூரிய குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து குறித்து விரிவுரையாளர்களுக் விசாரணைகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அறிவித்திருந்தது. எனினும் லண்டனில் இடம்பெற்ற உலக தமிழ் ஆய்வு 2013 மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இலங்கையில் இருந்து விரிவுரரையாளர்கள் சென்றதாக மாநாட்டின் தலைவரான யாழ்ப்பாண பல்கலைக்ககத்தின் பேராசிரியர் ஏ.சண்முகதாஸ் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்ற விரிவுரையாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தொந்தரவுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
« PREV
NEXT »

No comments