Latest News

September 09, 2013

நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தேவை; நவநீதம்பிள்ளையிடம் இலங்கை கோரிக்கை
by Unknown - 0

மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகத்தினர் மீது தாக்குதல்நடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தரவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமே இலங்கை மேற்கண்டவாறு இன்று திங்கட்கிழமை கோரியுள்ளதுஐக்கிய நாடுகளின் ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை மனித உரிமைகளை முழுமையாக பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது இலங்கை விஜயத்தின் போது தன்னை சந்தித்த இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வேறு சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர் தமது நேரத்தின் போது இதற்கு பதிலளித்த இலங்கை பிரதிநிதி, நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின்போது சுதந்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இலங்கை வன்முறையற்ற ஒரு சமூகத்தை கொண்டிருக்கிறது. அத்துடன் மனித உரிமை, சமய சமூகங்களின் பாதுகாப்பவர்களை பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் முழுமையாக ஈடுபடடுள்ளது என்று ரவிநாத ஆரியசிங்க சுட்டிக்காட்டினார்.
« PREV
NEXT »

No comments