Latest News

September 01, 2013

விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகள்: நேபாள மவோயிஸ்ட் தலைவர்
by admin - 0

 நேபாளத்தில் நடந்த தசாப்த
கால ஆயுத மோதல்களின்
போது, தமது கட்சிக்கும்
தமக்கும் இலங்கையின்
விடுதலைப் போராளிகளான விடுதலைப் புலிகளுக்கும்
தொடர்பு இருந்ததாக நேபாள மாவோயிஸ்ட்
தலைவரான பிரச்சண்டா என அழைக்கப்படும்
புஷ்ப கமால் தாஹால் தெரிவித்துள்ளார். நேபாள தலைநகர் காத்மண்டுவில்
மாவோயிஸ்ட் கட்சியின் நிகழ்வொன்றில்
உரையாற்றிய போதே அவர்
இதனை கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் போராளிக்
குழுவான விடுதலைப் புலிகளுடன்
மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருந்ததை
முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு, தமது கட்சிக்கும்
இடையில் இருந்த தொடர்பை அவர் முதல்
முறையாக பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள், இன விடுதலைக்காக
போராடியவர்கள் எனக் கூறியுள்ள அவர்,
புலிகளுடனான
உறவை நியாயப்படுத்தியதுடன் புலிகளின்
விடுதலைப் போராட்டம் போல் நேபாளத்தில்
நடந்த கிளர்ச்சியும் தேசிய விடுதலைக்கான போராட்டமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் மாவோயிஸ்ட்களிடம்
இருந்து உதவியை நாடினர். விடுதலைப்
புலிகள் தற்போது செயலற்று இருந்தாலும்
அந்த அமைப்பு ஒரு துணிச்சல் மிக்க அமைப்பு.
விடுதலைப் புலிகள்
அட்டூழியங்களுக்கு எதிராக போராடியவர்கள் என தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளிடம்
இருந்து மாவோயிஸ்ட்
அமைப்பு உதவிகளை பெற்றது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட புலிகள்
அதிகளவான உதவிகளை செய்தனர் என்றும்
தெரிவித்துள்ள அவர், எவ்வாறான உதவிகள் கிடைத்தன என்பதை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் விடுதலைப் போராளிகளான
விடுதலைப் புலிகளை அடக்க
சீனா இலங்கைக்கு உதவியதாக அவர்
கவலை வெளியிட்டுள்ளார். மாவோயிஸிட் தலைவரான பிரச்சண்டா 2008
ஆம் ஆண்டில் நேபாளத்தின் பிரதமராக
பதவியேற்றார். பின்னர் நேபாள ஜனாதிபதியுடன்
ஏற்பட்ட
முரண்பாட்டை அடுத்து பதவி விலகினார்
என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments