Latest News

September 20, 2013

காலத்தின் தேவை கருதி கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்யுங்கள் - போராளி சாள்ஸ் வேண்டுகோள்
by admin - 0

அன்புக்குரிய  தமிழ் மக்களே,

நாளை மறுதினம் (சனிக்கிழமை) யாழ் குடாநாட்டில் இடம்பெறவுள்ள தேர்தலில் எமது மக்கள் முழுமையாக பங்குபற்றி தமது பொன்னான வாக்குகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அளித்து அவர்களை வெற்றி பெறச் செய்யவும்.

அத்துடன் தமது கணவர் இராணுவத்திடம் சரணடைந்தும் இன்றுவரை அவர் எங்கு உள்ளார் என்று தெரியாத நிலையிலும் மிகவும் துணிச்சலாக ஒரு பெண்ணாக இருந்தும் தேர்தலில் போட்டியிடும் ஆனந்தி சசிதரன் (எழிலன்) என்பவருக்கு எமது மக்களாகிய நீங்கள் அவரது துணிச்சலையும் விடுதலை உணர்வையும் பாராட்டி வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறும் தங்களை அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.

தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டு வரும் இந்நிலையில் இந்த தேர்தலில் அரச தரப்பு வெற்றி பெறுவதற்கு இராணுவத்தினர் பல்வேறு வன்முறைகளைக் கையாளக் கூடும். எமது மக்களாகிய நீங்கள் துணிச்சலாகவும் பொறுப்பாகவும், எமது உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் உண்மையாக உழைப்பவர்களுக்கு உங்களது மகத்தான வாக்குகளை அளித்து, அவர்களை வற்றி பெறச் செய்யுமாறும் அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட சில முன்னால் போராளிகள், இராணுவ கூலிகளுடனும் EPDP தேச விரோதிகளுடனும் சேர்ந்து எமது உரிமைக்காக தேர்தலில் போட்டியிடுபவர்களை பின்னடையச் செய்வதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டுவருவது மிகவும் கவலைக்குரியது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மிக விரைவில் காலத்திற்கு பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

விடியும் சனிக்கிழமை எமது விடுதலைக்கு மீண்டும் ஒரு வலுவாக அமையட்டும்.

நன்றி.

அன்புடன்,
போராளி சாள்ஸ்


« PREV
NEXT »

No comments