Latest News

September 27, 2013

7 வயது சிறுமியை காணவில்லை - பொலிஸில் முறைப்பாடு!!
by Unknown - 0

நுவரெலியா, மாகாஸ்தோட்ட கீழ் பிரிவில், 7 வயது சிறுமியொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோரினால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு   செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தோட்ட பிரிவைச் சேர்ந்த சதாசிவம் ஞானதேவி தம்பதிகளின் மகளான நிவேதா  என்ற சிறுமியே  இவ்வாறு நேற்று மாலை 3.00 மணிமுதல் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று மாலை பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்பு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments