Latest News

September 26, 2013

ஐ.நாவில் மகிந்தவுடன் பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய அமைச்சர்கள் மதுபான விருந்து! - சனல்-4
by Unknown - 0

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் பிரித்தானியா பிரதிநிதிகள் இலங்கையுடன் மதுபான விருந்தில் கலந்து கொண்டிருந்தனர் என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த நூற்றாண்டின் மிக மோசாமான போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அரசாங்கம் இலங்கையில் ஆட்சி செய்து வருகிறது. இந்த விருந்தில் அவுஸ்திரேலியாவும் இணைந்து கொண்டுள்ளது.
இலங்கையின் பெரும் பிரதிநிதிகள் குழுவை ஏற்றிச் சென்ற கறுப்பு நிற கார்கள் ஐ.நா நகர விடுதியின் ககதவுகள் அருகில் நிறுத்தப்பட்டிருந்தன.
பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷோப் ஆகியோர் இந்த தலைமையில் இந்த விருந்துக்கான ஏற்பாடுகள் ஆறு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த விருந்தில் படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. விருந்துக்கு விடுதிக்குள் சென்றவர்களை மட்டுமே எங்களால் கெமராக்களில் பதிவுசெய்ய முடிந்தது.
தெருவுக்கு வெளியில் பிரித்தானிய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு படையினர் கூட்டாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எங்களது பிரசன்னம் அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையில் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு அந்த அமைப்பை சேர்ந்த இந்த மூன்று உறுப்பு நாடுகள் இந்த கொண்டாடத்தை நடத்தின.
இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. பல உறுப்பு நாடுகள் இந்த மாநாட்டை மொரீசியஸ் நாடுக்கு மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.
பொதுநலவாய அமைப்பின் தலைவியான பிரித்தானிய மகாராணி சொந்த காரணங்களை கூறி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துவிட்டார்.
இலங்கையில் இரத்தம் சிந்திய சிவில் யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் மட்டுமே கடந்துள்ளன. சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியங்களுடன் இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணப்படத்தை வெளியிட்டது.
அதேபோல் போர்தவிர்ப்பு வலயம் என்ற விவரணப்படத்தின் மூலம் இலங்கையில் 120,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்களையும் முன்வைத்தது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணித்துள்ளது. ஆனால் போரின் இறுதி மூன்று வாரங்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதனை விட இரண்டு மடங்காகும்.
எமது படங்கள், இலங்கை ஆட்டிலெறி தாக்குதலில் கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை காட்டின. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவா இணக்கப்பாடுகளை மீறி இலங்கை அரச படையினர் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
போருக்கு பின்னர் 100, 000 மேற்பட்ட தமிழர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை உலக வங்கி மதிப்பிட்டுள்ளளது.
போர் தவிர்ப்பு வலயம் விவரணப்படத்தில் போர்க்குற்றங்கள் மனிதாபிமான குற்றங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் ஏனைய பல தரப்பினர் இறுதிக்கட்ட போரில் நடந்த போர்க்குற்றங்களுக்கும் மனிதாபிமான குற்றங்களுக்கும் எதிராக இலங்கைக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இந்த குற்றங்களுக்கான சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments