Latest News

August 16, 2013

வெலிவேரிய தாக்குதல் குறித்து இராணுவம் விசாரணை! சட்டத்தை மீறி மக்களிடம் வாக்குமூலம்!
by admin - 0

இராணுவத்தினர் வெலிவேரிய பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் மதகுரு உட்பட பலரிடம் வாக்குமூலங்களை பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,வெலிவேரிய பிரதேசத்தில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான பொதுமக்கள் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்களை பெற இராணுவம் எடுத்த முயற்சிகளை தாம் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்திருந்தார்.
அத்துடன், இராணுவத்திற்கு இப்படியான விசாரணைகளை நடத்த சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனையும் மீறி இராணுவத்தினர் அப்பிரதேசங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments