Latest News

August 16, 2013

தமிழ் ஆய்வு மாநாடு மாத்திரமே TGTE ன் மாநாடு இல்லை
by admin - 0

உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் என்னும்
அமைப்பினால், லண்டனில்
நடத்தப்படும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டை ஈழ ஆதரவு மாநாடு என்று இலங்கை அரசாங்க தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. லண்டனில் நடத்தப்படும் உலகத் தமிழியல்
ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக
இங்கிலாந்து வந்த நான்கு இலங்கை விரிவுரையாளர்கள் ஒரு ஈழ ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்ள
வந்ததாகவும், அந்த மாநாட்டை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்வதாகவும், ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை அரசாங்க தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விரிவுரையாளர்கள் நாடு கடந்த
அரசாங்கத்தினால் நடத்தப்படும் மாநாட்டில்
கலந்து கொள்ளச் சென்றதாக இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியிருந்தார். இந்த மாநாடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த
விரிவுரையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவியான பேராசிரியர் க்ஸானிக்கா ஹிறிம்புறேகமவும் பிபிசியிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த மாநாட்டின் நோக்கம் என்ன என்றும் அதற்கு ஈழ ஆதரவு என்ற நோக்கமும் உள்ளதாக என்றும்
அதனை நடத்தும் உலகத் தமிழியல்
ஆய்வு நடுவத்தின் நிறுவனரான
செல்லத்துரை செல்வராசா அவர்களைக் கேட்ட போது,  அதனை மறுத்துள்ள அவர், இது தமிழ் ஆய்வு மாநாடு மாத்திரமே என்றும் கூறினார். தான், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், 6 மாதங்களுக்கு முன்னதாக
அதனை இராஜினாமா செய்து விட்டதாகவும் அவர் கூறினார்.

« PREV
NEXT »

No comments