Latest News

August 10, 2013

வெலிவேரிய சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை தேவை: மனித உரிமை கண்காணிப்பகம்
by admin - 0

வெலிவேரிய சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிடுவதனை தவிர்த்து உரிய சுயாதீன விசாரணைகளை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

சுத்தமான குடிநீரை பெற்றுத் தருமாறு கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் மூன்று பேர் உயிரிழந்தனர்.

படையினர் நடத்திய தாக்குதல்களை அரசாங்கம் நியாயப்படுத்தி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறிச் செயற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக தேவாலயத்திற்குள் பிரவேசித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களின் போது படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்துச் செயற்படுவதனை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

« PREV
NEXT »

No comments