Latest News

August 10, 2013

யாழில் தொடர்சியான மின்வெட்டு, மாணவர்களின் கல்வியைச் சீர்குலைக்கும் அரசின் திட்டமிட்ட சதி: சிறீதரன் எம். பி
by admin - 0

யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சைக் காலத்தில் தொடர்ச்சியாக அமுல் செய்யப்பட்டு மின்வெட்டு, மாணவர்களின் கல்வியைச் சீர்குலைக்கின்ற அரசின் திட்டமிட்ட சதி நடவடிக்கையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டுகிறார்.
தமிழினத்தின் அழிக்க முடியாத சொத்தாக இருக்கின்ற கல்வியை சீர்குலைப்பதற்கு பல வழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அரசாங்கம், தற்போது பரீட்சைக் காலத்தை அதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்துவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.
பரீட்சைக் கால மின்வெட்டு தொடர்பாக சிறீதரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது,
நாடு முழுவதும் தற்போது கா.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் அதிகாலையிலும் இரவு வேளையிலும் இடம்பெறும் மின்வெட்டு ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.
பரீட்சை ஆரம்பித்த நாளிலிருந்து மாவட்டத்தின் பல்வெறு பிரதேசங்களிலும் எந்தவித முன்னறிவித்தலுமின்றிமின்சாரம் தடை செய்யப்படுகிறது. 24 மணி நேர மின்சாரம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பரீடசைக் கால மின்வெட்டடானது திட்டமிட்ட நடவடிக்கையென அப்பட்டமாகத் தெரிகிறது.
யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான செயற்பாடுகள் இது முதற் தடவையாக இடம்பெறவில்லை. முக்கியமான பரீட்சைக் காலங்களில் முன்னரும் இவ்விதம் மீன்வெட்டு இடம்பெற்றது.
கடந்த புலமைப்பரிசில் பரீட்சை, மற்றும் கா.பொ.த. சா.தரப் பரீட்சை ஆகிய காலங்களிலும் மின்வெட்டு இடம்பெற்றது. மாணவர்களின் கல்வியை திட்டமிட்டுப் பாழாக்குகின்ற இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சீறீதரன் எம்.பி. மேலும் கூறினார்.
« PREV
NEXT »

No comments