திருகோணமலை மாணவர் படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரெஜியார் மனோகரன் என்ற மாணவரின் தந்தை டொக்டர் காசிப்பிள்ளை மனோகரன் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென கோரி, மனோகரன் மனித உரிமைப் பேரவையில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு தாம் சாட்சியளித்துள்ளதாகவும் இதனால் விசாரணை அறிக்கை தொடர்பில் அறிந்துகொள்ளும் உரிமை இருப்பதாகவும் டொக்டர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
மெய்யான கொலையாளிகளையும் என்ன நேர்ந்தது என்பதனையும் இந்த அறிக்கையின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 12 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment