Latest News

August 25, 2013

நவநீதம்பிள்ளையின் வருகை - கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு! un
by admin - 0

நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் 27-08-2013 அன்று காணாமல் போனோரை கண்டறியும் குழுவினால் கவனயீர்ப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களை கண்டறிதல் தொடர்பாகவும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளதும், புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளதும் விடுதலை தொடர்பாகவும், இராணுவம் மற்றும் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்பு, சிங்கள-பௌத்தமயமாக்கல் தொடர்பாகவும் மற்றும் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்புத் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் நவநீதம்பிள்ளை அம்மையாரின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் நடைபெறவுள்ள மேற்படி கவனயீரப்பு நிகழ்வுக்கு தமிழ்த் தேசிய மக்கள் மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்குகின்றதுடன் காணாமல்போனவர்களது குடும்பங்கள், நிலப்பறிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளது குடும்பங்களை சார்ந்தவர்கள் உட்பட அனைத்துப் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி அழைப்பு விடுத்துள்ளது.
« PREV
NEXT »

No comments