கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் அமைந்துள்ள பிருத்தானிய படை வீரரின் கல்லறையை அகற்றுவது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மயானத்தில் பிருத்தானிய படையணியினரின் 147 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பபிடத்தக்கது. குறித்த தகவலை இன்றைய தினம் வெளியிட்டார் கலாச்சார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க. இந்த மயான பூமி பிருத்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.குறித்த மயானத்தில் பிருத்தானிய படையணியினரின் 147 பேரும் 1815ஆம் ஆண்டு அம்மை நோய் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் நொவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டிற்காக இலங்கை வரும் பிருத்தானிய இளவரசர் சாள்ஸ், இந்த மயான பூமிக்கும் விஜயம் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே, இந்த கல்லறைகளை அகற்றுவதா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் இடம்பெற்று வருவதாக கலாச்சார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார
No comments
Post a Comment