ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இரண்டு திடீர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படாத இரண்டு திடீர் சந்திப்புக்களை நவநீதம்பிள்ளை நடத்தியுள்ளார். இதன் முதலாம் சந்தித்து திருகோணமலை சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் திருகோணமலையில் இயங்கும், சட்டத்தரணி அருட்தந்தை லோகேஸ்வரன் தலைமையிலான மனித உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இரகசிய சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
மூடிய அறைக்குள் இரகசியமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திருகோணமலைக்குப் பயணித்திருந்த நவநீதம்பிள்ளை கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

No comments
Post a Comment