36 வருடங்களின் பின்னர் முதன்முறையாக தென்கொரிய பிரதமர் இலங்கை வந்துள்ளார்.இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந;தடைந்துள்ள இவர் எதிர்வரும் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு இலங்கைக்கு தென்கொரியாவுக்கும் இடையில் ராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு பயணம் செய்யும் முதல் தென்கொரிய பிரதமர் வோங் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் சுங் ஹொங் வோங் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரத்ன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த
உள்ளார். இதன் போது இலங்கைக்கும் தென்கொரியவுக்குமம் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Post a Comment