Latest News

August 28, 2013

திருகோணமலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
by admin - 0

திருகோணமலைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விஜயம் செய்ததையடுத்து அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உறவினர்கள் இன்றுக்காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடி காணாமல் போன தமது உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
« PREV
NEXT »

No comments