Latest News

August 20, 2013

தொண்டமான், திகாம்பரம் இடையே நிகழும் காரசாரமான சொற்பூசல்
by admin - 0

கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயனற்றவர்களை காலில் மிதித்து கொல்வதற்கு ஐந்து நிமிடங்கள் கூட செல்லாது.வீதியில் சென்ற நாய்களை உணவூட்டி வளர்த்தேன், அவை தற்போது என்னை விட்டு சென்றுவிட்டன.
ஜாதியை கூறி கேவலப்படுத்தியதாக கட்சியை விட்டுச் சென்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். என்னுடன் உண்டு குடித்து மகிழ்ந்த காலத்தில் இதைப் பற்றி கூறாதவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கட்சிக் காரியாலத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இவ்வாறு செய்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவை கட்சிக் காரியாலங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒளிந்து ஒளிந்து தாக்காது நேருக்கு நேர் மோத வேண்டும்: திகாம்பரம்
ஒளிந்து ஒளிந்து தாக்குதல் நடத்தாது நேருக்கு நேர் மோதுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என தெளிவாக புரிந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தாது, முடிந்தால் நேருக்கு நேர் என்னைத் தாக்குமாறு சவால் விடுக்கின்றேன். முடிந்தால் தொண்டமான் நேருக்கு நேர் மோதிப் பார்க்கட்டும்.
ஆறுமுகன் தொண்டமான் இந்தியாவிலிருந்து வந்து பாதுகாப்பு படையினர் புடைச் சூழ்ந்து கொண்டு அரசியல் நடத்துகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது பொலிஸார் சுயாதீனமாக செயற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸே பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments