எனது விடாமுயற்சியும் பெற்றோரின் ஊக்கமும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் ஊடாகவுமே என்னால் தேசிய மட்டத்தில் சாதிக்கமுடிந்தது.
நான் தமிழ் மொழியில் மிகுந்த பற்றுக்கொண்டமையால் கற்ற பாடங்களையும் புதிய விடயங்களையும் தேடிக் கற்றுக்கொண்டமையினாலேயே என்னைத் தேசிய மட்டம் வரை கொண்டு செல்ல முடிந்தது என தேசிய மட்டத்தில் தமிழ் மொழிக் கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் தரம் ௫ இல் கல்வி கற்கும் மாணவியான கலையழகன் வேல்விழி தெரிவித்தார்.
தேசிய மட்டத்தில் தடம் பதித்த க. வேல்விழிக்கு பண்ணாகம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் அண்மை யில் பாரா ட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போதே மாணவி இவ்வாறு தெரிவித்தார்.இம் மாணவி தனது அனுபவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நான் கற்ற பாடங்களைத் திரும்பத் திரு ம்ப கற்று இலகுபடுத்திக் கொண்டேன். என்னைப்போல் ஏனைய மாணவர்களும் பின்பற்றுதல் வேண்டும்.
ஆசிரியர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல், தெரியாதவற்றைக் கேட்டுக் கற்றுக்கொள்ளல் என்பன மாணவர்களுக்கு முக்கியமானதாகும். நான் இரவு வேளைகளிலும் கூட ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று கல்வி கற்ற பின்னர் அப்பா என்னை வீட்டி ற்கு அழைத்து வருவார்.
எந்தவேளையிலும் எனக்கு ஊக்கத்தை அளித்தவர் எனது ஆசிரியர் புஷ்பராணி சுகுமார். எனக்காக நிறைய புதிய விடயங்க ளைத் தேடிக்கற்றுக் கொடுப்பார். அப்படியொரு ஆசிரியை எனக்குக் கிடைத்தமையே என்னை சாதனையின் முதல் படிக்கு ஏறவைத்தது.
எனது பெற்றோ ரும் சகோதரர்க ளும் ஊக்கம் கொடுத்து எனக்கு தேசிய மட்டம் செல்லவேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டார்கள். அதற்கமையவே நான் எனது பயணத்தை ஆரம்பித்தேன்.
என்னால் வலய, கோட்ட, மாவட்ட, மாகாண, தேசியமட்டப் போட்டிகளில் நடைபெற்ற தமிழ் மொழிக் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற முடிந்தது. இந்த ஐந்து மட்டங்களில் நடைபெற்ற போட்டிக ளில் வெற்றியீட்டுவதற்கு எனக்கு தன்னம்பி க்கை கை கொடுத்தது.
ஒரு மட்டத்தில் வெற்றி பெற்றவுடன் ஏனைய மட்டங்களிலும் நான் போட்டியிட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது.
தேசிய மட்டத்தில் நான் சாதித்தமையை ஒரு அனுபவமாக வைத்துக்கொண்டு கலந்து கொள்ளும் ஏனைய போட்டிகளிலும் என் னால் சாதிக்க முடியும் என்றார்.
இப் பாராட்டு நிகழ்வில் ஓய்வு நிலை திட்டமிடல் பணிப்பாளர் ஆ.கதிரைமலைநாதன், வடமாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.கைலாயநாதன், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி.நாச்சியார் செல் வநாயகம், பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி புஷ்பராணி சுகுமார் ஆகி யோர் கலந்துகொண்டனர்
No comments
Post a Comment