Latest News

August 15, 2013

படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை சிறார்களின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
by admin - 0

சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க, அன்று இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் திரு காஃபி ஆனான் தனது அதிர்ப்தியை தெரிவித்திருந்தார். மஹிந்த ராஜபாஸ்கே தனது மகிழ்ச்சியை தெரிவிக்க அவருடன் அமெரிக்க, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதுகாவலர்கள் என்று கூறியவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

போர் காலம் இல்லாத நேரத்த்தில் நான்கு போர் விமானங்கள் 16 குண்டுகளை வீசி கொன்ற 53 பள்ளி மாணவர்களின் படுகொலை - திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அதை பார்த்து கொண்டிருந்தவர்கள், அமைதியாக இருந்தவர்கள் அந்த இனப்படுகொலைக்கு பக்க துணையாக இருந்தார்கள் என்று கூறுவதில் என்ன தவறு.

2006 வுடன் படுகொலைகள் நிற்காமல், முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் இனப்படுகொலை, நடக்கும் நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தி சிறி லங்கா என்ற நாட்டிக்கு அங்கீகாரம் கொடுக்க நினைக்கிறது சர்வதேசம். இந்த நாளில் சர்வதேச நாடுகளின் நிலைபாட்டை கண்டித்து பாரிசில் செந்சோலை படுகொலையின் நினைவுகள், செங்கொடியின் தியாகாங்கள் நினைவு கூறப்பட்டு நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, தென் ஆபிரிக்கா நாட்டின் தூதராலயாத்த்தில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

பிரான்சு தமிழீழ மகளீர் அமைப்பு ஒழுங்கு செய்த இந்த ஒன்று கூடலில் பிரான்சு இளையோர் அபைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பல அரசியல் வேலை திட்டங்களை முன்னெடுத்த்து இருந்தனர். எமது போராட்டம் அடுத்த வாரம் நியூ ஜிலாலாந்து தூதரகம் அருகில் மெட்ரோ Victor Hugo (Ligne 2) அருகில் நடைபெறும். தொடர்ச்சியான எமது போராட்டங்கள் தான் நீதியான விடுதலையை தேடித்தரும்.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை











« PREV
NEXT »

No comments