Latest News

August 16, 2013

சிறிதரனிடம் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கிளிநொச்சியில் விசாரணை நடத்தியுள்ளனர்
by admin - 0

அண்மையில் அவர்
கனடாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம்
தொடர்பாக அரச சார்பு ஊடகங்களில்
வெளிவந்திருந்த செய்திகள் தொடர்பாகவே இந்த
விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை காலை 9.40 மணிமுதல், 11.30 வரையில் இந்த விசாரணை நடைபெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் கொழும்பு அலுவலகப் பொறுப்பாளர் பிரசன்ன டி அல்விஸ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான திலகரட்ண,
உதயகுமார் ஆகியோர் தமது கிளிநொச்சி அலுவலகத்திற்கு வந்து,
விசாரணை நடத்தி தன்னிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து சென்றுள்ளதாக சிறிதரன் கூறினார். கனடா சென்றிருந்த வேளை, அங்கு நடைபெற்ற கூட்டத்தில்
''விடுதலைப்புலிகளை இலங்கையில் மீண்டும் உருவாக்க முடியாது. எனவே,
கனடாவில் அந்த அமைப்பை உருவாக்கி, இலங்கையில் வந்து தாக்குதல் நடத்த
வேண்டும்'' என்றும், தமிழ் மக்களுடைய சொத்துக்கள் அனைத்தையும்
இராணுவத்தினரே அழித்தார்கள் என்றும், தமிழ்ப்பெண்களை இராணுவத்தில்
இணைத்து அவர்களை அழிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் சிறிதரன் பேசியதாகத் தெரிவித்து,
அது தொடர்பாகவே விசாரணைகள் நடைபெற்று வாக்குமூலம்
பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் இலங்கையில் அரச சார்பு ஊடகங்களில்
வெளிவந்ததையடுத்தே தாங்கள் இந்த விசாரணைகளை நடத்தியதாகவும்
பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்ததாகவும் அவர்
குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments