Latest News

August 27, 2013

நவிபிள்ளையின் அறிக்கை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் - சீமான்
by admin - 0

இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை வழங்குவார் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வந்துள்ளார். இவர், இறுதிக்கட்ட போர் நடத்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பார் என்ற தகவல் மிகுந்த ஆறுதலாக உள்ளது.

தமிழினம் திட்டமிட்டு இன அழித்தலுக்கு உள்ளாக்கப்பட்டதையும், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டிருப்பதையும், தமிழர் நகரங்களின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டிருப்பதையும் காணும் வாய்ப்பு இதன்போது அவருக்கு கிடைக்கும்.

போருக்குப் பிறகும் தமிழர்களின் பூர்வீக மண்ணில் ஒரு திட்டமிடப்பட்ட இன அழித்தல் தொடர்வதை உறுதி செய்யும் சான்றுகள் பலவும் கிட்டும். அதனடிப்படையில், நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கையே உலகத் தமிழினம் எதிர்பார்க்கும். இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும்.
எனவே, உலகத் தமிழினம் அவரின் பயணத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகிறது என குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments