ஆணையாளர் நவநீதம்பிள்ளை முல்லைத்தீவில்
இறுதிக்கட்ட யுத்தம்
இடம்பெற்ற பகுதிகளுக்கு இன்று மாலை விஜயம்
செய்துள்ளார். அத்துடன், பல்லாயிரக்கணக்கான
பொது மக்கள் கொல்லப்பட்ட
முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் அவர் விஜயம்
செய்துள்ளார். நேற்று மாலை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
செய்த நவநீதம்பிள்ளை, யாழ். பொது நுலகம்
மற்றும் மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம்
செய்து அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்
மற்றும் வடமாகாண ஆளுநர்
சந்திரசிறி ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இன்று காலை, யாழ்ப்பாணத்தில்
ஐ.நா உயரதிகாரிகளுடன், மனித உரிமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், நவி. பிள்ளை சமூகப்
பிரதிநிதிகளுடன் மூடிய அறைக்குள்
கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment