நாடு சுதந்திரம் அடைந்த
நேரு காலத்திலிருந்து மகள் இந்திரா காலத்திலும்,
பேரன் ராஜீவ் காந்தி காலம் வரை என 40 வருடங்களாக
அசைக்க முடியாத சோவியத் ரஷ்ய
ஆதரவு சோசியலிச நாடாக இருந்தது இந்தியா.
காட்சி 2:
இந்திரா காந்தி இறந்தவுடன் அந்த
பதவிக்கு வந்திருக்க வேண்டிய காங்கிரஸ் மூத்த
தலைவர் நரசிம்ம ராவ் ராஜீவ் காந்தியிடம்
வாய்ப்பை பறிகொடுத்து தன்னுடைய அரசியல்
வாழ்கையை முடித்துக்கொண்டு அவரது சொந்த கிராமத்தில் குடியேறுகிறார்.
காட்சி 3:
ராஜீவ் காந்தி திட்டகமிஷன் உறுப்பினர் மன்மோகன்
சிங்கை ஓர் அறையில் வைத்து வாய்க்கு வந்த
படி திட்டுகிறார். வேறொரு சமயத்தில்
பத்திரிகையாளரிடம் மன்மோகன்
சிங்கை 'கோமாளி' என்கிறார். காட்சி 4:
இந்திய ராணுவத்துக்கு போபோர்ஸ் ஆயுத பேரம்
படிகிறது. கமிஷன்
தொகையை சந்திராசாமிக்கு கொடுக்காமல்
மொத்தத்தையும் தானே கபளீகரம் செய்கிறார்
நம்முடைய கதாநாயகன். (சாமியார்னா பொட்டு வச்சிக்கிட்டு பொங்கல்
சாப்புடுவார்னு நெனச்சி கமிஷன்
தொகையை கொடுக்காம விட்டுட்டார் போல)
காட்சி 5: கோபமடையும் சாமியார் தன்னுடைய ஆசிரமத்தில்
ஆவேசமாக "மெய்ன் உஸ்கோ கதம் கர் தோயங்க"
என்றும் "ஜெய்சே உஸ்கி மாயின் கி மௌத்
ஹுயே வைசே ஹீ ராஜீவ் காந்தி கோ மருங்க"
என்றும் அடிக்கடி கூவியதாக ஜெயின் கமிஷன் விசாரணையில் சாட்சியாக பதிவாகியுள்ளது.
(நமக்கு அதற்கான அர்த்தம் புரியவில்லை என்றாலும்
ஜான் ஆப்ரகாமுக்கு புரியும் என்று நம்புவோமாக) காட்சி 6:
1991 பனிப்போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க
பொருளாதார நிலைமை மோசமடைகிறது.
சோவியத் உடைகிறது. ராஜீவ் கொல்லப்படுகிறார்.
நாட்டில் புரட்சி இல்லை, வறட்சி இல்லை,
சோசியலிச பாதையிலிருந்து இந்தியா கேபிடலிஸ
பாதைக்கு திரும்புகிறது.
காட்சி 7: * சொந்த கிராமத்தில்
ஓய்வெடுத்துக்கொண்டிருந்த, தேர்தலில் கூட போட்டியிடாத சந்திராசாமியின் உயிர் தோழனான
நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். * உலக வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த
மன்மோகன் சிங் இந்திய நாட்டின் நிதியமைச்சர்
ஆகிறார். * இந்திய அரசியலில் முதல் முறையாக
எதிர்க்கட்சி எம்.பி.யான சுப்ரமணிய சாமி கேபினட்
அமைச்சருக்கு ஈடான இந்தியாவிற்கான சர்வதேச வர்த்தக குழுவின் தலைவர் ஆகிறார்.
காட்சி 8:தமிழன் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுகிறான்.
No comments
Post a Comment