Latest News

August 09, 2013

தமிழர்களின் தாகம் எமது பூர்வீக தேசமான வடக்கு, கிழக்கு இணைந்த தாயகமே - வேட்பாளர் எம்.எம்.ரதன்
by admin - 0

வடக்கு கிழக்கு இணைந்த தாயகமே எமது பூர்வீக தேசம். இது எங்களின் சொந்த மண் என்ற நிலையில் நாம் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக சர்வதேசம் வரைக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகமே எங்களின் நீண்ட கால தாகம் இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும், வவுனியா நகரசபை பதில் தலைவரும் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமாகிய எம்.எம் ரதன் தெரிவித்தார்.
வவுனியா பண்டாரிகுளம் இத்தியடி விளையாட்டுக்கழக வீரர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழர்களின் தாகம் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகமே என்பதற்கிணங்க கடந்த காலம் 60 வருடங்களுக்கு மேலாக தமிழினம் ஒவ்வொரு போராட்ட வடிவங்களையும் தங்கள் லட்சியமாக அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டது.
தமிழர்களை அடக்கி ஒடுக்கி முகவரியை இல்லாமல் செய்யலாம் என்று நினைத்த பேரினவாதிகளுக்கு எமது படையணிகள் சாத்வீக ரீதியிலும் ஆயுத ரீதியிலும், இராஜதந்திர ரீதியிலும் நகர்விலும் எமது போராட்டத்தை நகர்த்தியுள்ளன.
எனவே இவ்வாறான சூழ்நிலையில் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காகத் தங்களின் பொன்னான வாக்குகளைத் தமிழர் உரிமையின் சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு அளித்து எமது வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய உறுதி பூண வேண்டும் என்றார்.



« PREV
NEXT »

No comments