Latest News

August 09, 2013

உயர்தரப் பரீட்சைக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும்- விக்னேஸ்வரன் அறிவுறுத்தல்
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தேர்தல் கால அறிவுறுத்தல்களை  தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்வி எங்கள் மூலதனம். பரீட்சை எழுதுகின்ற எமது மாணவர்களின் எதிர்கால வாழ்வு எங்கள் தேசத்தில் மிகவும் அடிப்படையானது.
அந்த வகையில் இது தேர்தல் காலம் எனினும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எமது மாணவர்கள் இப்பரீட்சையில் தமது முழு ஆளுமைத்திறனையும் வெளிப்படுத்தி சித்தி பெற வேண்டும் என்பது எமது அவா. இதனைக் கருத்திற் கொண்டு எமது வேட்பாளர்கள் தமது தேர்தல் கால பிரசார நடவடிக்கைகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.
மாணவ மாணவியரின் நலன் கருதி அவர்களுக்கு எந்த விதத்திலும் எவ்விதமும் பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள். ஜனநாயகத்தினையும் பொது அமைதியையும் கவனத்திற் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments