Latest News

August 20, 2013

பொதுநலவாய நாடுகளது தலைவர்கள் மாநாட்டை குழப்பும் புலிகளும் NGOகளும்: திவயின tgte
by admin - 0

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை குழப்புவற்காக புலம்பெயர்நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான மகஜர்களை அரச தலைவர்களுக்கும், பொதுநலவாய நாடுகளின் செயலகத்திற்கும் அனுப்பியுள்ளதாக திவயின  சகோதர ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான தகவல்கள் இலங்கை பாதுகாப்பு சபைக்கும் கிடைத்துள்ளதெனவும் இலங்கையில் பயங்கரமான நிலை காணப்படுவதாகவும் யுத்தத்தின்போது ஒரு லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மகஜர்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கனடா, ஜெர்மனி, நோர்வே, பிரித்தானியா, சுவிஸர்லாந்து, பிரான்ஸ், சுவீடன், அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளில் இருந்தும் தமிழகத்தில் இருந்து இந்த மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவதை தடுக்க செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே, பீ.பீ.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹெரிசன் ஆகியோரும், பொதுநலவாய நாடுகளின் பேச்சாளர் ரிச்சர்ட் உகுவுக்கு பொய்யான தகவல்களை அளித்துள்ளதாகவும் திவயின தனது நேறடறைய பதிப்பில் கூறியுள்ளது.
« PREV
NEXT »

No comments