Latest News

August 20, 2013

தமிழகத்தில் இன்று முதல் தலைவா....
by admin - 0

விஜய் நடித்த தலைவா படம் இன்று முதல் தமிழகத்தில் வெளியாகிறது. முதல் காட்சி இன்று காலை சென்னை மாயாஜால், சத்யம் எஸ்கேப் உள்ளிட்ட அரங்குகளில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடங்கியது. முதல் காட்சி என்பதால் விஜய் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர் படம் பார்க்க. தியேட்டர்கள் முன்பு பேனர்கள், அலங்கார வளைவுகளை விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பில் அமைத்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமையே டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும், முன்பதிவு எதிர்ப்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை.

திருட்டு டிவிடியால் பாதிப்பு காரணம் இந்தப் படத்தை நிறையப் பேர் திருட்டு டிவிடியில் பார்த்துவிட்டது. இன்னொன்று படம் எப்படி இருக்கிறது என்ற தகவல்கள் விமர்சனங்கள் மூலம் ஏற்கெனவே தெரிந்துவிட்டதுதான்.

ஆனால் இன்று முதல் நாள் காட்சிக்கு அனைத்து அரங்குகளும் கிட்டத்தட்ட ஹவுஸ் புல். சத்யம் சினிமாஸின் அனைத்து அரங்குகளிலும் தலைவா முதல் காட்சி ஹவுஸ் புல்லாகிவிட்டது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு முன்வரிசை டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
முதல் நாளான இன்று டால்பி அட்மோஸ் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகிவிட்டன. ஆனால் வழக்கமான காட்சிகளுக்கு ஓரளவு டிக்கெட்டுகள் கிடைக்கின்றன

« PREV
NEXT »

No comments