ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேருவில மாவட்டம் என்ற பெயரிலான இந்த மாவட்டம் திருகோணமலை மாவட்டத்துக்கு மேலதிகமாக அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்துக்காக அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு 500 ஏக்கர்
வரையான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இறக்கண்டி முதல் குச்சவெளி வரையிலான கடலோர காணிகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்த நிலையில் தற்போது மூதூரில் இருந்து கிண்ணியா வரையான மேலும் 300 ஏக்கர் காணிப்பரப்பு இந்த
புதிய மாவட்டத்துக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்கின்ற போதும் இவ்வாறான
காணி சுவீகரிப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment