Latest News

August 10, 2013

நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகை சர்வதேச விசாரணைக்காகவே!- தமரா குணநாயகம்
by admin - 0

அமெரிக்காவின் தேவைக்கமைய இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான விடயங்களை தேடுவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்வதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமை ஆணைக்குழுவின் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்திருந்த யோசனையில் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.
எனினும் விசாரணையாளர் யார் என்பதை அவர் தனது யோசனையில் முன்வைக்கவில்லை. எனினும் அவரே அந்த விசாரணையாளர்.
அவரது இந்த செயற்பாடு தந்திரமானது. இது பற்றிய புரிதல் எமக்கில்லை.
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.
தமக்கு கட்டுப்பட்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதே மேற்குலக நாடுகளில் தேவையாக இருக்கின்றது என்றார்.
« PREV
NEXT »

No comments