Latest News

August 21, 2013

பிரித்தானியாவில் madras cafe திரைப்படத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம்
by admin - 0


தமிழர்களின் நியாமான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக
சித்தரித்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நியாப்படுத்தி “மெட்ராஸ் கஃபே” என்கிற திரைப்படம்
தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கிணங்க
சென்னை திரையரங்கு ஒன்றில் 18.08.2013 அன்று அப்படம் திரைப்படப்பட்டது.இப்
படத்தை பார்த்த தமிழ் அமைப்புக்கள் சிங்கள
இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித்
தாண்டவத்தை மறைத்துவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது. என கருத்து வெளியிட்டு உள்ளனர். இதேவேளையில் மெட்ராஸ்
கஃபே திரைப்படத்தை லண்டனில் சினி வேல்ட் திரையரங்கில் எதிர்வரும் 23.08.2013
அன்று திரையிட திட்டமிட்டுள்ளார்கள்.
அதனால் மெட்ராஸ்
கஃபே திரைப்படத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் ஒன்று பிரித்தானியா தமிழர்
ஒருங்கிணைப்பு குழுவால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ லட்சியத்தில் தொடர்ந்து பயணிக்கவும் மாவீரர்களின் கனவை நனவாக்கவும்
அணைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானியா தமிழர்
ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 22ம் திகதி மாலை 2
மணி தொடக்கம் 6 மணிவரை நடைபெறவுள்ள இம்முற்றுகைப் போராட்டம் CINEWORLD
HEAD OFFICE | POWER ROAD STUDIOS
POWER ROAD | CHISWICK | LONDON |
W4 5PY | இடம்பெறும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments