Latest News

August 18, 2013

Madras Cafe உலகு எங்கும் திரையிட அனுமதிப்பதில்லை -தமிழ் உணர்வாளர்கள்
by admin - 0


தமிழீழ விடுதலை புலிகளை தவறாக சித்தரித்தது மட்டும் இல்லாமல் இலங்கையின் போர்குற்ற அரசை நல்லவனாக காட்டும் Madras Cafe திரைப்படம் தமிழகம் இல்லை உலகம் முழுவதும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தமிழ் உணர்வாளர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.Madras Cafe படம் மகிந்தவின் பணத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது என உறுதி செய்யும் அளவுக்கு தற்பொழுது இந்த படத்தின் கதை கருத்து உள்ளதாக அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழக மாணவர்களும் இதற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் Madras Cafe திரைப்படத்தின் மூலகருவே இதுதான். தமிழர் விடுதலை போராட்டத்தை கேவலமாகவும் தேசிய தலைவரை கேட்டவராகவும் சித்தரிக்கும் Madras Cafe படத்துக்கு சில புலம்பெயர் குறிகிய மனம் படைத்தவர்களின் சீமானையும் மற்றும் நெடுமாறன் ஐயா அவர்களையும் குறைகூறுவதாகற்காக Madras Cafe திரைப்படத்தை ஆதரிக்கிறார்களாம் என்ன தமிழ் பற்று.



சரவணை மைந்தன்


இரத்தம் கொதிக்கிறது...,

MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்!
நம் தலைவர் பிரபாகரனின்
தவறான முடிவுகளால்
சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்....

கடைசி வரை அமைதிக்காக தவம்
கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன்
கொன்றார்...

படம் முழுக்க
தமிழ் இனத் துரோகம்!!!

# ஆகத்து 23 ஆம் தேதி
எங்கெல்லாம் முடியுமோ..
அங்கெல்லாம் படத்தை வெளியிடு!

நாங்களும் வெளியிடுறோம்,
தெருவுக்கு தெரு...
மேடை போடுறோம்!
ராஜிவ் காந்தி கொலைக்கு
பின்னாடி உள்ள ..
காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்?
சாமியார்கள் யார்?யார்?
அதிகாரிகள் யார்?யார்?
மாநில ஆளுநர்கள் யார்?யார்?
உலக நாடுகள் யார்?யார்?


மானமுள்ள மாணவத் தலைமுறைத் தமிழனே வீதிக்கு வா!
தமிழன் என்றால் யார் என்று காட்டுவோம்...
-சற்று முன் தமிழக மாணவர்களிடமிருந்து..


« PREV
NEXT »

No comments