Latest News

August 08, 2013

கோதபாயவும் தயா ரட்நாயக்கவும் பதவிவிலக வேண்டும் - நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி
by admin - 0

நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும், இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவும் பதவி விலக வேண்டுமென பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒன்றியத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார். 

வெலிவேரிய சம்பவத்தின் காரணமாக இவ்வாறு பதவி விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 
அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த இருவரும் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வெலிவேரிய பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை நகைப்பிற்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுக்களே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

போராட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஏன் இராணுவத்தை ஈடுபடுத்தியது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இடம்பெறுகின்றமைக்கு மற்றமொரு உதாரணமாகவே இதனைக் கருத வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments