Latest News

August 07, 2013

நயினாதீவு இறங்குதுறையில் இருந்து தமிழரின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்
by admin - 0

முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்கின்றது என்ற தமிழ்ப் பழமொழிக்கு நிறைந்த அர்த்தம் உண்டு. இந்தக் கருத்தில் இருந்து தான் அத்தனை பிரச்சினைகளும் தோற்றம் பெறுகின்றன. அந்த வகையில் முந்தி இருந்ததை பிந்தி வந்தது மறைப்பது, தடுப்பது, குலைப்பது என அனைத்தும்,பிரச்சினையின் தோற்றுவாய்களே. இதற்கு நல்ல உதாரணம் நயினாதீவுக்கான குறிகாட்டுவான் படகுச் சேவையாகும். முன்பெல்லாம் குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும் படகுகள், நயினா தீவு அம்மன் கோயிலின் முன்பாக உள்ள இறங்கு துறையில் தரித்து நின்று பயணிகளை இறக்கும். ஆனால் இப்போது நயினாதீவில் உள்ள விகாரைக்கு சிங்கள மக்கள் செல்லும் பொருட்டு விசேடமாக இறங்குதுறை அமைக் கப்பட்டுள்ளது. இந்த இறங்குதுறை அமைக்கப்பட்டதன் பிற்பாடு, குறிகாட்டுவானில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நயினாதீவுக்குச் செல்லும் படகுகள் முதலில் நாகவிகாரை இறங்கு துறைக்குச் செல்லும்.
அங்கு படகில் இருக்கின்ற சிங்கள மக் களை இறக்கிய பின்பே நயினாதீவு இறங்கு துறைக்கு பயணிக்கின்றது.

இத்தகைய நடவடிக்கையால் குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்லமுடியாத அளவில் பெரும் கஷ்டங்களை நயினாதீவு மக்களும், வெளியி டங்களில் இருந்து கடமையின் நிமிர்த்தம் நயினா தீவுக்குச் செல்வோரும் எதிர்கொள்கின்றனர். நாகவிகாரை இறங்குதுறையில் விகாரைக் குச் செல்பவர்கள் மட்டுமே இறங்கிக் கொள்வர். ஆனால் நயினாதீவு இறங்குதுறையில் நாகபூசணி அம்மன் கோயிலுக்குச் செல்பவர் கள் மட்டும் அன்றி அந்த ஊர்மக்கள் மற்றும் ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் உள்ளனர். நிலைமை இதுவாக இருக்கின்ற போதிலும் படகுகள் நாகவிகாரை இறங்குதுறைக்கு முதலில் செல்லுதல் என்பது கட்டாயமான தாக்கப்பட்டுள்ளது.

காலாகாலமாக குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவு இறங்குதுறைக்குச் செல்கின்ற நடைமுறையில், இந்த புதிய புகுத்தல் தமிழ் மக்கள் மத்தியில் எத்துணை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை மனிதநேயத் தோடு பார்ப்பது கட்டாயமானதாகும். நயினாதீவில் நாகவிகாரை உள்ளது. அதனால் சிங்கள மக்கள் அங்கு செல்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்தாக வேண்டும். இது பெளத்த சிங்கள நாடு. அங்கு இருப்பதோ கடற்படை. எனவே நயினாதீவு மக்கள் என்று பார்க்க முடியாது. நாம் இட்டதே சட்டம். இதற்கு அங்கு இருக்கக்கூடிய சாதுவின் ஆசியும் உண்டு என்ற நினைப்பில் நடந்து கொள்வது இனஒற்றுமைக்கு குந்தகமானது. இந்த நாட்டில் இனஒற்றுமை ஏற்பட வேண்டும் என யாரேனும் நினைப்பார்களாயின் அவர் கள் நயினாதீவு இறங்குதுறையில் இருந்து நிலைமையை சீராக்கவேண்டும். எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றோம் என்று கூறுவது புறவயமானது. உண்மையான இனஒற்றுமை என்பது அகவயமானது. ஆக அகவயமான ஒற்றுமையை ஏற்படுத்த வேண் டுமாயின் எந்தச் சந்தர்ப்பதிலும் சிங்களம்-தமிழ் என்ற பாகுபடுத்தலுக்கு இடம்கொடுக்கக் கூடாது.
« PREV
NEXT »

No comments