Latest News

August 22, 2013

சடலத்தை வீதியில் விட்டுச்சென்ற சவப்பெட்டி
by admin - 0

சவப்பெட்டியில் வைத்து எடுத்து செல்லப்பட்ட சடலம் நடு வீதியில் விழுந்த
சம்பவமொன்று கண்டியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. கண்டி மலர்ச்சாலையிலிருந்து கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மாவத்தை ஊடாக மலர்ச்சாலை வாகனத்தில் எடுத்துச்சென்ற சடலமே இவ்வாறு விழுந்துள்ளது. சவப்பெட்டியின் மூடியும்  மலர்ச்சாலை வாகனத்தின் கதவும் ஏக காலத்தில்
திறந்துக்கொண்டதையடுத்து சடலம் நடுவீதியில் விழுந்துள்ளது. சடலம் கீழே விழுந்து விழுந்ததை அறியாத மலர்ச்சாலை வாகனத்தின் சாரதி அந்த வாகனத்தை நெடுந்தூரம் செலுத்தி சென்றுவிட்டார். இந்நிலையில், கீழே விழுந்த சடலத்தை பிரதேசவாசிகள் மற்றுமொரு வாகனத்தில்
ஏற்றிச்சென்று மலர்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments