கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று மாலை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அப் பகுதியில் அமைந்துள்ள 'மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம்’ பள்ளிவாசலின் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியமையை அடுத்து அங்கு மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 3 பேர் காயமடைந்துள்ளதுடன் இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பொலிஸார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் நிலமையை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டு பொலிஸார் மற்றும் கலகத் தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் நிலமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்தாக்குதலின் போது மஸ்ஜித்தின் அருகே அமைந்துள்ள வீடுகள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் சிறி சுவர்ண சைத்திய வீதியிலுள்ள ‘மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம்’ பள்ளிவாசலின் புதிய கட்டிடத்தொகுதி க்டந்த மாதம் 4 ஆம் திகதி திறக்கப்பட்டபோதிலும் பௌத்த தேரர் தலைமையிலான குழுவினரின் எதிர்ப்பு காரணமாக அன்றைய தினம் மாலையே அப்பள்ளிவாசல் மூடப்பட்டது.
இதன்பின்னர் இவ்விடயம் குறித்து புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது மஸ்ஜித்தை வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கு அதன் நிர்வாகம் இணங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment