Latest News

August 11, 2013

பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக் கூடாது; பிரித்தானிய தமிழ் அமைப்புகள் கோரிக்கை
by admin - 0

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் பிருத்தானியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி பிரித்தானிய தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக் கூடாது என பிரித்தானிய தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றையும்  நடாத்த திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ் அமைப்புகள் சில விடுத்திருந்த கோரிக்கையை பிரித்தானிய அரசு நிராகரித்திருந்தது. ஆனால் இம்முறை அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து மீண்டும் கோரிக்கையை முன்வைத்துள்ளன. அத்துடன் அரசின் சில முக்கிய அமைச்சர்களைச் சந்திக்கவும் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. பிரித்தானிய தமிழர் பேரவையும் நாடு கடந்த தமிழீழ அரசும் இதில் தற்போது முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும் யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளைக் கடந்தும் தமிழருடனான நல்லிணக்க நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. அத்துடன் ஐ.நா சபையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளைக் கூட இலங்கை அரசு இதுவரை செயற்படுத்தவில்லை. தொடர்ந்தும் தமிழரின் நிலை தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் கொழும்பில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவது அதன் முக்கிய குறிக்கோளை மீறிய செயலாகும். அதனால் பொதுநலவாய அமைப்பு மாநாட்டை வேறொரு நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாது கொழும்பிலேயே மாநாடு நடத்தப்படுமேயானால் பிரித்தானியா அதில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் அந்த அமைப்புக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளன.
« PREV
NEXT »

No comments