Latest News

August 28, 2013

இரசாயனக்குண்டு விவகாரம் சிரியாவைப் போல் சிறிலங்காவிலும்: இலங்கையில் ஐ.நா ஆணையாளர் நவிபிள்ளை
by admin - 0

சிரியாவில் இரசாயனக்குண்டுத் தாக்குதல் மூலம் 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகிய விடயம் சமகால அனைத்துலக அரங்கில் பிரதான விவகாரமாக பேசப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் இறுதி யுத்தகளத்தில் இரசாயனக்குண்டுகள் பாவிக்கப்பட்டதென்ற விடயம் மீண்டும் வெளிக் கிளம்பியுள்ளது.
வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுவரின் ஆட்கொணர்வு மனுவொன்றிலேயே இரசாயனக்குண்டு விவகாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள்இலங்கைக்கான பயணத்தினை மேற்கொண்டிருக்கும் இவ்வேளை இவ்விவகாரம் வெளிக்கிளம்பியுள்ளது.
இதேவேளை போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இடமான முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அப்பகுதியின் மண்,நீர் போன்றவற்றின் மாதிரிகளை எடுத்து அவற்றில் இராசயன ஆயுதங்களை பாவித்து பொது மக்களை கொன்றதற்கான தடயங்கள் இருக்கின்றதா என்று கண்டறிய, தொழில்த்துறை நிபுணர்களை, இலங்கைக்கு தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் ஐ.நா ஆணையாளரிம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனுவொன்றினை ஏலவே கையளித்திருந்தது.
இந்நிலையில்இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு தங்களின் கண் முன்னாலேயே இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய முகங்கள், உடல்கள் விகாரமடைந்து, துன்பமடைந்து அவர்கள் மரணமடைந்ததைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments