அரசாங்கம் இராணுவ ஆட்சியை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் காலத்தில் பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் இராணுவமயப்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இராணுவத்தின் மீது மக்களுக்கு மரியாதை இருந்தது.
அரசாங்கத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவம் பயன்படுத்தப்படுகின்றது.
அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்வதற்காக அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment