Latest News

August 13, 2013

பூநகரியில் குடும்பப் பெண் மீது இராணுவ உடை தரித்தோர் பலாத்காரம்! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!
by admin - 0

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள வினாசியோடை கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் 38 வயதுடைய தாய் வாய்களை பச்சைத் துணிகளால் கட்டிய பச்சை உடை தரித்த இருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது குடும்ப வருமானத்திற்காக பனை ஓலையில் பொருட்கள் செய்து விற்கும் இப் பெண் ,இன்று மாலை 4.30க்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமை போன்று பனை ஓலை எடுப்பதற்கு சென்ற வேளை இராணுவ உடையில், பச்சைத் துணிகலால் வாய்களை கட்டிய இருவர் அப் பெண்னை பலாத்காரம் செய்த விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டும் இரத்தப் போக்கு கட்டுப்படாததனால் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கும் நிலை நீடிப்பதுடன் பெண்களின் நிலை யுத்தகாலத்தை விட ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது

பூநகரி பிரதேச செயலக பிரிவில் 6000 குடும்பத்திற்கு 30 000 இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் மீது அதீத அழுத்தங்களும் இராணுவ அடாவடிகளும் அதிகரித்த நிலையில் இன்றைய இச் சம்பவம் இவ்வாறு ஒரு பெண்ணை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது என்பது வேதனைக்குரியதே என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments